திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:26 IST)

புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்: முக்கிய ஆலோசனை!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் புழல் சிறையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மூன்று வழக்குகள் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு வழக்கில் மட்டுமே ஜாமீன் கிடைத்துள்ளது. மீதி உள்ள வழக்குகளில் ஜாமீன் பெறுவது, மற்றும் திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது