செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:57 IST)

ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருக்கும் ஜெயகுமார்: காரணம் என்ன?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
 
ஒன்று திமுக தொடரை அரை நிர்வாணபடுத்தி தாக்கிய வழக்கு, மற்றொன்று சாலை மறியல் செய்த வழக்கு.
 
இந்த நிலையில் சாலை மறியல் செய்த வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து அவர் புழல் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது