வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:25 IST)

ஜெயகுமாருக்கு 5 நாட்கள் காவல்: காவல்துறை மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என காவல் துறை தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
 சாலை மறியல் செய்த வழக்கில் மட்டும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர்களை தாக்கிய வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது