வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (19:47 IST)

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த விவகாரத்தில் 6 பிரிவுகளில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஜெயகுமார் மட்டுமின்றி ஜெயக்குமாரின் மகள் மருமகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.