ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (17:34 IST)

தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு..! இரு தரப்புக்கும் பொது சின்னங்கள் வழங்க கோரிக்கை..!!

இரட்டை இலை சின்னத்தை நிறுத்தி வைத்து இரண்டு தரப்புக்கும் பொதுவான சின்னங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் ஏ,பி படிவங்களில் கையெழுத்திட தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 
இரட்டை இலை சின்னத்தை நிறுத்தி வைத்து இரண்டு தரப்புக்கும் பொதுவான சின்னங்களை வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.