வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (09:07 IST)

வேட்பாளர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் தேர்தல் ஆணையம்? – புதிய விதிமுறையால் சிக்கலில் சில வேட்பாளர்கள்!?

election commision
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை ஊடகங்கள் மூலமாக வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் விதிமுறையில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேட்பாளர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து மக்களுக்கு விரிவான தகவல்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள், முன்னர் அவர் பெற்ற தண்டனைகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சார காலத்தில் 3 முறை செய்தித்தாள்கள், டிவி சேனல்கள் மூலம் தொகுதி மக்களிடையே தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்க போகும் நபர் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு சில குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு புளியை கரைத்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Edit by Prasanth.K