1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (15:52 IST)

400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.- அண்ணாமலை

Annamalai
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கோயம்புத்தூரில் பிரதமர் ரோட் ஷோ நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று ஆய்வு செய்த பின் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
மக்களவை தேர்தலில் கோவை உள்ளிட்ட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.  தமிழகத்தில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழ் நாடு அரசு பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில்,  உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
 
மேலும், கூட்டணி பற்றிய முடிவுகள், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிகழ்ச்சியில் 10 மீ தொலைவில் பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.