6 மாநிலங்களின் உள்துறை செயலாளர் பணி நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம்
குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி நீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் DGP-ஐ பணி நீக்க்ம செய்தும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.