திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (11:12 IST)

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கம்!!

savukku
பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அவருடைய விமர்சனங்களை என தனியாக ஒரு கூட்டமே ரசித்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென சவுக்கு சங்கரின் டுவிட்டர் பக்கம் கடந்த சிலமணி நேரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரின் மீது பல்வேறு தரப்பினர் புகார் கூறியுள்ள நிலையில் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருந்த புகைப்படத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது