புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:19 IST)

செப்டம்பர் மாதம் நடக்கும் டிடிவி தினகரனின் மகள் திருமணம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடக்க உள்ளது.

அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மகள் ஜெயஹரினிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.

இந்த திருமணம் ஜூன் மாதமே நடக்க இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போன நிலையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடக்க உள்ளது.