1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:55 IST)

கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

senthil balaji
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
கோடைகாலத்தில் 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கோடைகாலத்தில் தமிழகத்தின் மின்சார தேவை 17,196 மெகாவாட் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
கோடைகாலத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சரே கூறியதால் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது