1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:48 IST)

திடீரென வெடித்து சிதறிய வீடூகளில் இருந்த டிவி, மிக்ஸி, கிரைண்டர்: நெல்லை அருகே பரபரப்பு

tv mixie
திடீரென வெடித்து சிதறிய வீடூகளில் இருந்த டிவி, மிக்ஸி, கிரைண்டர்: நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக 45 வீடுகளில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் திடீரென வெடித்து சேதமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் செட்டிகுளம் கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி உள்ளது. அவை வேகமாக காற்றில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது 
 
இதைப்போல் விபத்து ஏற்பட்ட நிலையில் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில் பயன்பாட்டில் இருந்த சுமார் டிவி மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் வெடித்துசேதம் அடைந்துள்ளது.
 
இந்த சேதம் அந்த பகுதியில் இருந்த சுமார் 45 வீடுகளிலும் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் கருகியதாகவும் கூறப்படுகிறது.