1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (16:28 IST)

கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தினை குறைக்க உதவும் நுங்கு !!

கோடைக்காலம் வந்து விட்டாலே வெப்பத்தின் அளவு உச்ச நிலையில் இருக்கும் காற்று அனல் காற்றாக வீசும். தினமும் காலையில் நுங்கினை சாப்பிட்டுவிட்டு வெளியே செல்வதன் மூலம் உடலினை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம்.


கோடை காலத்தில் அதிக வெப்பத்தினாலும் மற்றும் அதிக நேரங்கள் கண்விழித்து இருப்பதாலும் கண் எரிச்சல் மற்றும் கண்வலி போன்றவை ஏற்படுகிறது.

தினமும் காலையில் நுங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

நுங்கு உடல் எடையினை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் நுங்கினை சரியான அளவு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

நுங்கில் உள்ள சத்துக்கள் அதீத பசி உணர்வினை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் நீர் சுரப்பினை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க வழிவகுக்கின்றது.

கர்ப்பக்காலத்தில் நுங்கினை சாப்பிட்டு வருவதன் மூலம் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவது மலச்சிக்கல் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பதுகாக்கும்.