1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (11:31 IST)

ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு – மக்கள் அதிருப்தி!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கோடை காலங்களில் மக்கள் குடும்பத்தோடு இந்த ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். ஆனால் இப்போது அவர்களில் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக இந்த கட்டணத்தை 3000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.