தமிழகத்தில் மட்டும் இது தொடர்வதன் மர்மம் என்ன? கமல்ஹாசன் கேள்வி!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கான பரிசோதனை கட்டணம் தமிழகத்தில் மட்டும் குறையவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் குறைந்துவிட்டது என்றும் கமலஹாசன் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்
ஆனால் அதே நேரத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சோதனை செய்வது இலவசம் தான் என்பதும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அங்கு இலவசமாகவே சோதனை செய்து கொள்ளலாம் என்றும் கமலஹாசன் இதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்
தமிழகத்தில் கமல்ஹாசன் உள்பட புதிய மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது அதுகுறித்து என்றைக்காவது கமலஹாசன் குரல் கொடுத்தாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்