1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (15:15 IST)

தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட முடியாத 3 மாணவிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட முடியாத 3 மாணவிகள்:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதா இந்த ஆண்டு நிறைவேறியதை அடுத்த 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்தது 
 
இந்த நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரி கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லாததால் 3 மாணவிகள் தவித்து வந்தனர்
 
இந்த மூன்று மாணவிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என திமுக உட்பட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இந்த நிலையில் தனியார் மருத்துவ கல்லூரியில் கட்டணம் கட்ட வசதி இல்லாமை காரணமாக ஒதுக்கீட்டு ஆணை பெறாத மூன்று மாணவிகளுக்கும் மீண்டும் சேர்க்கை ஆணையை சுகாதாரத் துறை வழங்கிய வழங்கி உள்ளது  
 
மூன்று மாணவிகளுக்கு இடம் கிடைத்தும் பணம் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத தகவலை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த மூன்று மாணவிகளை தொடர்பு கொண்டு அவர்கள் நாளைக்குள் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரியில் கட்டணம் கட்டாமல் சேரலாம் என திருத்தப்பட்ட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த 3 மாணவிகளும் மருத்துவ கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது