மருத்துவ கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் பழனிசாமி!
மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களால் எப்படி கல்வி கட்டணம் செலுத்தி பயில முடியும் என கேள்வி எழுந்தது.
இந்த கேள்விக்கு விடை தரும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உள் ஒதுக்கீட்டில் இடம்பெரும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை செலுத்தும் என அறிவித்துள்ளார்.