புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (09:10 IST)

2 தொகுதிகள் மட்டுமா? அவசர ஆலோசனை செய்யும் ஜிகே வாசன்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில கட்சி கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. தமிழ் மாநில கட்சி 4 தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் அதிமுக இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது. இருப்பினும் ஈரோடு கிழக்கு மற்றும் பட்டுகோட்டை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் இந்த இரண்டு தொகுதிகளை மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக வழங்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் 2 தொகுதிகள் மட்டுமா என்ற அதிருப்தியில் ஜிகே வாசன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜிகே வாசன் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பதும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அதிமுகவில் ராஜ்யசபா தொகுதியை பெற்றுள்ள ஜிகே வாசன் அந்த கட்சிக்கு எதிரான முடிவை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.