புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (09:10 IST)

விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு பொதுத்தொகுதி… எங்கு தெரியுமா?

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு பொதுத்தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.  நான்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ள இரண்டு தொகுதிகள் இன்னும் முடிவாகவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள்  5 தனித்தொகுதிகள் ஒதுக்க உள்ளதாகவும் ஒரு தொகுதியை பொதுத்தொகுதியாக கொடுக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த ஒரு தொகுதி உடுமலைப்பேட்டையாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.