புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (19:49 IST)

விசிக போட்டியிடும் தொகுதிகள் எப்போது முடிவாகும்? திருமாவளவன்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல் நாளை மாலைக்குள் முடிவாகிவிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே நான்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ள இரண்டு தொகுதிகள் இன்னும் முடிவாகவில்லை என்றும் நாங்கள் கேட்கும் ஒரு தொகுதியை இன்னொரு கட்சியும் கேட்பதால் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மற்றபடி கூட்டணியில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் திருமாவளவன் கட்சியின் ஆறு வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது