1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Only Rajini has worked Seemans hard hit

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு...

ரஜினி
தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார்.
தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார்.
 
இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.
 
இந்நிலையில் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் , ரஜினியை விட கமல்ஹாசன் தான் அதிகளவு கலைத்துறையில் உழைத்தவர். ஆனால் ரஜினியை குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
லிட்டில் சமீராவுடன் கடற்கரையில் கியூட் போட்டோஷூட் நடத்திய சமீரா ரெட்டி!