திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (21:22 IST)

திருச்சியில் கல்லூரி மாணவி கொலை! முன்விரோதம் என தகவல்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்காக போராடி வருவதாக திடுக்கிடும் செய்தி ஒன்று சற்றுமுன் வெளியான நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இன்னொரு திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
 
திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் மக்கள் நடமாடும் பிசியான பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கத்தியால் குத்திக்கொன்ற நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். படுகாயத்துடன் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
முதல்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவி மலர்விழியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் அவருடைய உறவினர் முரளி என்பதும், முன்விரோதம் காரணமாக முரளி இந்த கொலையை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. 
 
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் தாக்கப்பட்டு அதில் ஒருவர் பலியாகியுள்ளது, இன்னொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.