தொடர்புடைய செய்திகள்
- ரூ.6000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. ஏழை எளியவர்களுக்கு இனி எட்டாக்கனியா?
- கிராமத்தில் இருந்து தலைநகர் செல்ல ரூ.5 மட்டுமே பேருந்து கட்டணம்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!
- முதல் முறையாக சென்னையில் இசை கச்சேரி நடத்தும் சந்தோஷ் நாராயணன்!
- சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!
- சென்னை நேரு ஸ்டேடியத்தில் கேப்டன் மில்லர் ஆடியோ வெளியீடு.. தேதி இதுதான்!
ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயிலில் பயணம்.. சென்னை பயணிகள் மகிழ்ச்சி..!
டிசம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெட்ரோ ரயிலில் வரும் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிச.3ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக டிசம்பர் 3ம் தேதி அதிக மக்கள் பயணம் செய்யாததால், டிச.17ல் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. குறைவான கட்டணம், டிராபிக் இல்லாத போக்குவரத்து, அதிக வசதி ஆகியவை இருப்பதால் பெரும்பாலான பயணிகள் பேருந்து மற்றும் மின்சார ரயிலை விட மெட்ரோ ரயில் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
