திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:32 IST)

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக சமீபத்தில்  சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.  
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 20 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
 
Edited by Siva