தமிழகத்தில் ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்… சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை!
ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஆன்லைனில் அதிகமாக சூதாட்டம் நடப்பதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள் உலகின் மிகவும் அதிகமான பணம் கொட்டும் தொடராக மாறியுள்ளன. இதனால் அதை ஒட்டி ரசிகர்களை சூதாட்டம் இழுக்கும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக சூதாட்டம் நடப்பதாக சைபர் கிரைம் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்மந்தமாக பெங்களூரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டத்தில் சூதாட்டத்தில் பங்கேற்க வைக்கின்றனர். ரூ.1,000 முதல் பல லட்சம் வரை பணம் கட்டி சூது நடப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்திலும் இதுபோல ஆன்லைன் சூதாட்டம் நடப்பதால் சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.