செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:45 IST)

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் புதின்!!

உலகம் முழுவதும் பணிபுரியும் ஐ.நா. சபை ஊழியர்களுக்கு ரஷ்யா கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
 
முன்னதாக இந்த தடுப்பூசி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், பிறகு இது பாதுகாப்பானது என உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியபோது, உலகம் முழுவதும் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களுக்க்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி என்ற கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். 
 
மேலும், கொரோனாவுக்கு எதிராக செயல்படும் இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். வெக்டர் ஆய்வு மையத்தின் “எபிவாகொரோனா” என்ற இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், அக்டோபர் 15க்குள் இதன் பதிவு செய்யும் பணிகள் முடிய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.