திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:58 IST)

இந்தியில் ரீமேக் ஆகும் நானியின் படம்… தமிழ்ல என்னப்பா ஆச்சு!

நானி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஜெர்ஸி திரைப்படம் ஷாகித் கபூர் நடிப்பில் இந்தியில் அதே பெயரில் ரீமேக் ஆக உள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஜெர்சி என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 36 வயது என்பது கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது. அந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடும் ஒரு கிரிக்கெட் வீரனின் கதையே ஜெர்ஸி. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க இருந்தார். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் இந்தப்படத்தில் நடிக்க இவரைத் தேர்வு செய்தனர்.

ஆனால் அதன் பின்னர் அந்த படம் பற்றிய எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் அந்த படத்தின் தற்போதைய நிலை என்ன எனக் கேட்க, அதற்கு விஷ்ணு விஷால் ‘எந்த தகவலும் இல்லை சகோ, எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது. ஆனால் அதற்கான இடத்துக்கு செல்லவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்தியில் அந்த படம் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது. இது குறித்து நானி ‘என் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது எனக்குக் கிடைத்த பெருமைதான்’ எனக் கூறியுள்ளார்.