திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (09:16 IST)

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து! – மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரயில் சேவை, பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.



சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பொது போக்குவரத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க இன்று மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 10மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து மெட்ரோ ரயில்களும் 7 நிமிட இடைவெளியில் செயல்படும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமங்களை குறைப்பதற்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூடுதலாக நகர பேருந்துகளை இயக்குவதாகவும் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K