வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (10:05 IST)

காணாமல் போன பள்ளி மாணவர்கள் மீட்பு.. அம்மாவே அழைத்து சென்றாரா?

செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவேரிபாக்கம் அருகே மாணவர்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய்  ஆர்த்தி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக  மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை யாரிடமும் சொல்லாமல் அழைத்துச் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 
 
காணாமல் போன பள்ளி மாணவர்கள் குறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார், மாணவர்கள் இருவரையும் மீட்டனர். தாய் ஆர்த்தி மற்றும் குழந்தைகள் இருவரையும் காவேரிப்பாக்கத்தில் மீட்ட போலீசாார், செங்கல்பட்டு காவல் நிலையம் அழைத்து வருகின்றனர். இதன்பின்னர் தாய் ஆர்த்தியிடம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது. 
 
முன்னதாக திடீரென பள்ளி மாணவர்கள் காணாமல் போனதால் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்ததாகவும் ஆனால் அதன் பின்னர் தான் இது ஒரு குடும்பப் பிரச்சனை என்றும் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடந்த சம்பவம் இது என்றும் விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran