1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (09:01 IST)

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபர் கைது..!

Arrest
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ள நிலையில் கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் ஜோசப் ராஜா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மேலும் ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva