வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (20:26 IST)

தலைவா என்னை காப்பாற்றுங்க.. கள்ளக்குறிச்சி சென்ற விஜய்யிடம் ரசிகர் கோரிக்கை..!

நடிகர் விஜய் இன்று கள்ளக்குறிச்சி சென்று விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய நிலையில் அவர்களில் ஒருவர் விஜய் ரசிகராக இருந்த நிலையில் அவர் விஜய்யை பார்த்ததும் தலைவா என்னை காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த விஷ சாராய மரணங்கள் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில திரையுலக பிரபலங்கள் திமுக அரசை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பிய விஜய் முதல் வேலையாக கள்ளக்குறிச்சி மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அடுத்த கட்டமாக இன்று மாலை அவர் நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் கூறிய போது அவர்களில் ஒருவர் விஜய் ரசிகர் என்ற நிலையில் அவர் ’தலைவா என்னை காப்பாற்று’ என்று கெஞ்சிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ஒரே நபர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva