1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (20:36 IST)

பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!

பொய் வழக்கு போடும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காட்டுங்கள் என நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது சவுக்கு சங்கர் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெண் போலீசை தரக்குறைவாக பேசிய வழக்கு உட்பட பல வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் என்று நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.  
 
அப்போது அவர் காவல்துறை பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென கோஷமிட்டார். அந்த கோஷத்தில் அவர் ’காவல்துறை போய் வழக்குகள் போட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொய் வழக்குகள் போட செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் செலுத்தி இருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது என்றும் அவர் கூறினார்.
 
மேலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva