வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (15:34 IST)

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழப்பு என்றும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்த தகவல் வெளியான போது ஐந்து பேர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை 29 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்த நிலையில் அதன் பின்னர் 30 ஆக சில மணி நேரத்தில் உயர்ந்தது.
 
இந்நிலையில் தற்போதுஉயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது அந்த பகுதி மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran