1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (11:59 IST)

ஒரு முருங்கைக்காய் ரூ.25-க்கு விற்பனை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Drumstick
மதுரையில் ஒரு முருங்கைக்காய் விலை 25 ரூபாய் என கூறப்படுவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில வாரங்களாகவே முருங்கைக்காய் விலை அதிகரித்து வருகிறது என்றும் ஒரு முருங்கைக்காய் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையானது என்றும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் இன்று முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளதை அடுத்து ஒரு முருங்கைக்காய் 25 ரூபாய் என விற்பனையானது. 
 
தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் வரும் முருங்கைக்காய் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து வியாபாரிகள் கூறிய போது ’கடந்த மார்ச் மாதமே முருங்கைக்காய் சீசன் முடிந்துவிட்டது. இதனால் மகசூல் குறைந்துள்ளது. மாட்டுத்தாவணிக்கு வரும் முருங்கைக்காயின் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த முருங்கைக்காய் விலை உயர்ந்து உள்ளது.  முருங்கக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்.
 
Edited by Siva