1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:49 IST)

மதுரை அருகே சாதி வெறியாட்டம், உடனே கைது செய்க.. திருமாவளவன் அறிவுறுத்தல்..!

மதுரை அருகே சாதி வெறியாட்டம் நடந்துள்ளதாகவும் இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
 
மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். 
 
சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த  சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக்  கண்டிக்கிறது. 
 
சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
 
Edited by Siva