வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (16:33 IST)

மதுரையில் ஜாகிங் சென்ற தனுஷ் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் பல செய்திகள் வெளியானது.  தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் மதுரையில் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அங்கு தனுஷ் காலையில் ஜாகிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.