திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (18:47 IST)

நாளை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

நாளை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற இருப்பதை அடுத்து மதுரையில் பக்தர்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மதுரையில் அமைந்துள்ள கூடல் அழகர் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசத்தலங்களில் 47வது தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மாதம் கொடியேற்றுடன் வைகாசி திருவிழா தொடங்கிய நிலையில் வரும் எட்டாம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. 
 
இந்த நிலையில் நாளை சனிக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. கூடல் அழகர் பெருமாள் கோவில் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தேரை அலங்கரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதை அடுத்து இந்த தேர் திருவிழாவை காண்பதற்காக மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
 
Edited by Mahendran