வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூன் 2023 (16:45 IST)

கொள்ளைக் கணக்கில் விமான டிக்கெட்.. யார் பொறுப்பு! – எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்!

Su Vengadesan
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காண பலரும் விமான டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்யும் நிலையில் விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



ஒடிசாவில் ஏற்பட்ட ரயில்கள் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 900 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய தங்கள் உறவினர்களை காண இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த மக்களும் ஒடிசா செல்லும் விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய முயன்று வருகின்றனர்.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர் “கொடூரமான ரயில் விபத்தைக் கூட லாப நோக்கில் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ”அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்ற மோடி அரசே! ஒடிசாவுக்கு விமான டிக்கெட் 6 முதல் 20 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது. அரசு விமான சேவை இருந்திருந்தால் வந்தே பாரத் என்று கருணை காண்பித்திருக்கலாம் அல்லவா! கருணை இல்லா அரசே.. உறவினர்களின் விமான பயண கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K