தொடர்புடைய செய்திகள்
- திருமண வயசு வந்துட்டா பாலியல் உறவு சட்ட விரோதம் இல்லை!.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- 'டெட்' தேர்ச்சி இனி அவசியமில்லையா? தமிழக அரசின் புதிய அரசிதழ் சொல்வது என்ன?
- 85 கோடி ரூபாய் ஜீவனாம்சம்.. 23 ஆண்டு சட்டப்போராட்டம் செய்த பெண்ணுக்கு கிடைத்த நீதி..!
- ஸ்வீடனில் இருந்து வந்த போன் கால்.. ஆபத்தில் இருந்த முதியவரை மீட்ட மதுரை தீயணைப்பு துறையினர்..!
- வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி அனுமதி..!
தந்தையை கைவிட்ட மகன்களுக்கு சிறை, அபராதம்!.. 84 வயசில் கேஸ் போட்டு தீர்ப்பு வாங்கிய தாத்தா!..
வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே உள்ள முக்கியத்துவமும், மகத்துவம் கூட பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக பெரியவர்கள் மீது காட்டப்படும் அன்பும் மரியாதையும் வெகுவாகவே குறைந்துவிட்டது. 70,80களில் பிறந்தவர்கள் கூட இப்போதெல்லாம் வயதான தனது தந்தை தாயை பராமரிப்பதில் விருப்பம் இல்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது, தெருவில் விட்டு விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில்தான், காரைக்காலில் முனுசாமி (84) என்கிற முதியவர் ஆறு ஆண்டுகளாக ஆதரவின்றி வறுமையோடு போராடி வரும் நிலையில் தனது மூன்று மகன்களிடமும் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்./ அந்த வழக்கை விசாரித்த காரைக்கால் நீதிமன்றம் அவரின் மூன்று மகன்களும் அவரின் தந்தைக்கு மாதம் தலா 2 ஆயிரம் வழங்க வேண்டும், தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது..
ஆனால் தனது தந்தைக்கு மாதம் 2 ஆயிரம் கொடுக்க விருப்பம் இல்லாத அந்த மூன்று மகன்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. இதையடுத்து அந்த முதியவர் மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் மூன்று மகன்களுக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் கேட்ட தொகையை கொடுக்காவிட்டால் சிறை தண்டனை தொடரும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
