1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. O Panneer selvam statement to Arumugasamy Commission

தெரியாது.. தெரியாது.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்!

தமிழகம்
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை பற்றி எனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்திடம்  ஓபிஎஸ் வாக்குமூலம். 


 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகியுள்ள நிலையில் அங்கு அவர் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு...
 
ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது நான் சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன். பின்னர் மருத்துவமனை சென்ற போது தலைமைச் செயலாளரிடமே விவரங்களை கேட்டறிந்தேன். 
 
ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் தவிர வேறு நோய் எதுவும் இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியாது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது. 
 
பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே விசாரணை ஆணையக் கோப்பில் கையெழுத்திட்டேன் என தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மேகதாது தனி தீர்மானம்: பாஜக ஆதரவு!