வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (09:46 IST)

மேகதாது அணை: எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

 
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதன் மீதான விவாதம் வரும் திங்கள், செவ்வாய், புதன் என 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 
அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. மேலும் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
 
ஆம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவோ, அனுமதிக்கவோ கூடாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.