தொடர்புடைய செய்திகள்
- தான் இயக்கி வரும் படத்தை விஜயகாந்த்க்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சீனு ராமசாமி!
- விஜயகாந்த் ட்விட்டர் கணக்கு பிரேமலதா பெயருக்கு மாற்றம்.. தொண்டர்கள் அதிருப்தி..!
- திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
- விஜயகாந்த் செய்த மக்கள் பணிகளை மறைக்க முயற்சி.! திமுகவை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்.!! பிரேமலதா அறிக்கை.!
- விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற நடிகர் ராதா! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!
24-ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி! தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
உடல்நல குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என என்று தேமுதிக தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
