திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:14 IST)

விஜயகாந்த் ட்விட்டர் கணக்கு பிரேமலதா பெயருக்கு மாற்றம்.. தொண்டர்கள் அதிருப்தி..!

கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் அவருடைய பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுவது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுவரை கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

பிரேமலதாவின் இந்த செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கேப்டனின் ட்விட்டர் கணக்கை அப்படியே வைத்திருக்கலாம் என்றும்  பிரேமலதா விஜயகாந்த் தனக்கென தனியாக ஒரு கணக்கை ஆரம்பித்திருக்கலாம் என்றும் கேப்டனின் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டு அவரது பெயரில் இருந்த கணக்கை தனது பெயருக்கு மாற்றி உள்ளது சரியல்ல என்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran