வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (16:51 IST)

ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கும், ஓபிஎஸ்-க்கு எந்த தொடர்பும் இல்லை! ஜல்லிக்கட்டு நாயகன் இல்லை - ஜெயக்குமார்

jayakumar
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் ஒரு திட்டம், இதை திமுகவினர் தங்களது கட்சி சின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 

சென்னை துறைமுகம் பகுதியில் செய்தியாளிடம் பேசிய ஜெயக்குமார், ஜல்லிக்கட்டு என்பது வீரத்தை பறைசாற்றுகின்ற ஒரு விழா  1000, 2000 ஆண்டாக நடைபெற்று வருகிறது  என்றார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று மக்கள் கொடுத்த அழுத்தத்தில் சாதகமாக தீர்ப்பு வரப்பட்டது என்றும் ஓபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லுவது நியாமில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்
 
திமுகவினர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவருடைய தாத்தாவின் பெயர் சூட்டுகின்றனர், தமிழகத்தில் வீரத்தை பறைசாற்ற பல்வேறு மன்னர்கள், வீரர்கள் இருக்கும் நிலையில் திமுகவின் தலைவரின் பெயர் எதற்கு என கேள்வி எழுப்பினார். அரசு சார்பில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் இன்றைக்கு கலைஞரின் பெயர் சூட்டப்படுகிறது என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டினர்
 
திமுகவினரின் அவசரத்தால் கிளாம்பாக்க பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்

மேலும் திமுகவின் ஆட்சியில் புதிதாக பேருந்துகள் வாங்கப்படவில்லை, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை, காலி பணியிடங்களை நிரப்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.