1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (13:00 IST)

தான் இயக்கி வரும் படத்தை விஜயகாந்த்க்கு சமர்ப்பிக்கும் இயக்குநர் சீனு ராமசாமி!

seenu ramasamy, vijayakanth
கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தை நடிகர் விஜயகாந்திற்கு சமர்பிப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர், மாமனிதன் திரைப்படத்துக்குப் பின் இயக்கி வரும் படம்  கோழிப்பன்னை செல்லதுரை .

இப்படத்தில் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கிறார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்..

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தி முதல் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

 
இந்த நிலையில், கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தை நடிகர் விஜயகாந்திற்கு சமர்பிப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் வைகை நதிபுரத்து மாமனிதர்,
வள்ளல்,
மனிதாபிமானி
அண்ணன்,
நடிகர்,
கேப்டன் திரு,விஜயகாந்த் அவர்களுக்கு எனது இயக்கத்தில் உருவாகி வரும் #கோழிப்பண்ணைசெல்லதுரைஎன்ற  தெற்கு சீமையின் வாழ்வை பேசும்  படைப்பை  அண்ணன் அவர்களது பாதங்களில்  சமர்ப்பிக்கிறேன்.