முடிவுக்கு வந்தது வடகிழக்கு பருவமழை! இனி மழை இருக்குமா? – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் தற்போது பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதியில் தொடங்கியது. அப்போதிருந்து வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் எல் நினோவால் பெய்த அதிகனமழைதான் இந்த பருவக்காலத்தில் பெய்த அதி கனமழையாக உள்ளது.
இந்நிலையில் தை மாதம் தொடங்கும் நிலையில் வடகிழக்கு பருவக்காற்று குறைந்ததால் பருவமழை விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் இருந்து பருவமழை விலகிய நிலையில் இனி வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவும் என்றும், சில நாட்கள் கழித்து வளிமண்டல மாறுதல்களுக்கு ஏற்ப சில இடங்களில் சொற்ப அளவில் மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K