1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chance of rain in 14 districts in next 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

rain red umbrella
தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14  மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
யூடியூப் சேனலை உருவாக்குதல் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு