1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (14:13 IST)

வழக்கை ரத்து செய்ய வேண்டும்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் மனு.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை..!

தங்களுக்கு எதிராக பதியப்பட்ட  வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
 
தனியார் நிறுவனம் தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பதிவாளர், பேராசிரியர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்  துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் ஆகிய மூவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
 
Edited by siva