ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (16:50 IST)

கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

Death
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவருடன் பணியாற்றி வந்த   இளைஞரை கலப்பு திருமணம் செய்து கொண்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாகப் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாகி, கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரிந்தது. இதையடுத்து,  ஐஸ்வர்யாவை  ஊருக்கு அழைத்தனர். அங்கு சென்ற ஐஸ்வர்யா  கடந்த 3 ஆம் தேதி இறந்துள்ளார்.

இதுபற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை எரித்துள்ளனர்.

இதுகுறித்து எல்லோருக்கும் தகவல் தெரியவே, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.