திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:41 IST)

வரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது: பிடிஆர் தகவல்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்திருந்தார்
 
கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு இன்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் அந்த அறிக்கையில் கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்த செலவினங்கள் வரவுகள் வட்டி கடன்கள் ஆகியவை குறித்து விரிவாக தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இனிமேல் வெள்ளை அறிக்கை வெளியிட தேவைப்படாது என்றும் திரும்பவும் வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவுக்கு நாங்கள் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்